Advertisment

தொடரும் பள்ளி மாணவர்களின் மீதான பாலியல் கொடுமை; அரசு முற்றுப்புள்ளி வைக்குமா?

Y

கிருஷ்ணகிரியில் 4 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே அரசு நடுநிலைப்பள்ளி ஆங்கில பாட ஆசிரியர் பாலகிருஷ்ணன் என்பவர் அதே பள்ளியில் படிக்கும் 7 மற்றும் 8 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த நான்கு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக வந்த புகாரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் பாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளது.

ஆசிரியர் பாலகிருஷ்ணன் மீது ஏற்கனவே அரசுப்பள்ளியில் மேலாண்மை குழுவில் பணமோசடி மற்றும் பணியில் சேர்ந்த போது போலிச் சான்றிதழ் வழங்கிய குற்றச்சாட்டுகள் உள்ளது. மேலும் அவர் கடந்த ஆண்டு பணியிட நீக்கம் செய்யப்பட்ட நிலையில் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்மபுரி கிருஷ்ணகிரி இரு மாவட்டங்களிலும் இந்த சம்பவங்கள் தொடர்கதையாகவே உள்ளது. தர்மபுரி கிருஷ்ணகிரியிலும் இருமாவட்டங்களிலும் சேர்ந்து 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது . வழக்குப் பதிவு செய்யாது எண்ணிக்கை அடங்காது .

 

Advertisment
C
பாலகிருஷ்ணன்

 

அதிலும் குறிப்பாக தர்மபுரியில் உள்ள ஆசிரியர்களை அரசியல் பின்புலத்தால் தப்பிக்க வைத்து வருவதே வழக்கமாக உள்ளது. இதற்கு குறிப்பாக அங்குள்ள சி.இ.-வின் அலட்சியமே இது போன்ற பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமகாவும் உள்ளது. பணத்தை பெற்றுக்கொண்டு குற்றம் செய்யும் ஆசிரியர்களையே கண்டும் காணாமல் விடுவதே இது போன்ற சம்பவம் மேலும் தொடர வழிவகை செய்கிறது.  உடனடியாக தர்மபுரி, கிருஷ்ணகிரி இரு மாவட்டங்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூடுதல் கவனம் செலுத்தி இதற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

Krishnagiri police crime
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe