Will Rahul-Vijay meet? - The answer given by Selva Perunthakai Photograph: (congress)
சென்னை பூந்தமல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பேசுகையில், 'தமிழக முதல்வரின் உடல்நிலை சீராக உள்ளது. டெஸ்ட் எல்லாம் எடுத்து வந்திருக்கிறார்கள். இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். அவருடைய உடல் வலிமை மன வலிமை அவருக்கு ஒரு நோயும் வராது.
துணை குடியரசுத் தலைவர் ராஜினாமா செய்தது குறித்து பாஜக தான் விளக்கம் அளிக்க வேண்டும். என்ன நெருக்கடி காரணமாக அவர் ராஜினாமா செய்தார் என்று. அரசியல் சட்டத்திற்கு எதிராக பேசினார் என்ற குழப்பங்கள் அவர்களுக்குள்ளாகவே இருக்கிறது. நாடாளுமன்றத்தில் துணை குடியரசுத் தலைவர் தன்னுடைய ஆற்றல்மிகு பங்களிப்பை அளித்தார் என்றும் பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற சிலருக்கு பிடிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகி வருகிறது. தெளிவாக ஒரு முடிவுக்கு விரைவில் வருவார்கள்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'விஜய்-ராகுல் காந்தி சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறதே' என்ற கேள்விக்கு, 'உங்களுக்கு தான் தெரியும். எங்களுக்கு இதுவரை தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்' என்று தெரிவித்தார். மேலும் கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான கேள்விக்கு, ''மிக விரைவில் குற்றவாளியை போலீசார் கண்டுபிடிப்பார்கள். தனிப்படை அமைத்து தேடும் படலத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள். கண்டிப்பாக குற்றவாளியைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவார்கள்'' என்றார்.