Advertisment

தி.மு.க.வில் இணையும் ஓ.பி.எஸ்.?

ops-mks-meet1

கோப்புப்படம்

பரபரப்பான அரசியல் சூழலில் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த 20ஆம் தேதி பூங்கொத்து கொடுத்து சந்தித்து பேசியிருந்தா. அதாவது சட்டபேரவையில் அமைச்சர்களின் பதிலுரை முடிவடைந்த பிறகு முதல்வர் அவைக்குள் வரும் போது அவரை பார்ப்பதற்கு வாயில் அருகே ஓ. பன்னீர்செல்வம் காத்திருந்து முதலல்வர் மு.க. ஸ்டாலினை அவரது அறையில் அறையில் சுமார் 10 நிமிடங்கள் சந்தித்து பேசியிருந்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

Advertisment

மற்றொருபுறம் ஓ.பன்னீர்செல்வத்தில் ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் சட்டப்பேரையில் பேசுகையில், “வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக (நமது மாண்புமிகு தலைவர்) மு.க. ஸ்டாலின் அவர்கள் வரவேண்டும் என்று, எம்ஜிஆர் ஆசியோடும், ஜெயலலிதா ஆசியோடும் மீண்டும் மீண்டும் வரவேண்டும் என்று இந்த நேரத்தில் நான் அவர்களை வாழ்த்தி (எங்கள் அண்ணன்) ஓ.பி.எஸ். அவர்களின் வாழ்த்துக்களோடு நன்றி கூறி எனது தொகுதி மக்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். 

Advertisment

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளிதார். அதில், “திமுகவின் ஆட்சி சிறப்பாக நிறைவு பெற்றதன் காரணமாக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளேன். எம்.எல்.ஏ. ஐயப்பனின் செயல், எண்ணம் என்பது தமிழக மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இன்றைக்கு சொல்லியிருக்கிறார். பொதுவான கருத்து, இன்றைக்கு இருக்கின்ற அரசியல் சூழ்நிலை, கடந்த 5 ஆண்டுக்கால ஆட்சியின் நிலை, தமிழகத்திற்கு செய்த சாதனைகள் எல்லாம் மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு உள்ளது” எனத் தெரிவித்திருந்தார். 

ops-mks-meet
கோப்புப்படம்

இத்தகைய சூழலில் தான் அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் பதவி வகித்த ஜெயலலிதாவின் 78வது பிறந்த தினம் கடந்த 24ஆம் தேதி (24.022026) தமிழகம் முழுவதும் உள்ள அவரது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, தேனியில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு   ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஏற்கனவே நான் நடத்தி கொண்டிருக்கின்ற அதிமுக  தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர் கூட்டத்தில் கொடுத்த அறிவிப்பு படி எந்த நிலையிலும் நான் தனிக்கட்சி துவங்க மாட்டேன் என நான் அறிவித்திருக்கிறேன்.

அதிமுகவை மீட்டெடுக்கவும், கட்சியின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதற்காக தான் இந்த கழகம் தோற்றுவிக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஓ. பன்னீர் செல்வம் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஒ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

dmk mk stalin O Panneerselvam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe