Will it come back again? - Shock in the morning Photograph: (tamilnadu)
தொடர்ச்சியாகவே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் விசைப்படகுடன் நெடுந்தீவு பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் யாழ்ப்பாணம் அருகே காங்கேயம் துறை வடக்கு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஏழு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து இரண்டு நாட்டுப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 7 மீனவர்கள் காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளதாக வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி வருகிறது. விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட அவர்கள் மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us