கணவனை கொலை செய்து மனைவியே வீட்டுக்குள் 5 அடி ஆழத்திற்கு குழிதோண்டிப் புதைத்த சம்பவம் அசாமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சபியல் ரஹ்மான்-ரஹீமா கதுண் தம்பதி. 15 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று கணவன் மனைவி இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். பின்னர் சபியல் ரஹ்மான் திடீரென காணாமல் போனார்.
அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் 'எங்கே உன்னுடைய கணவர்' என ரஹீமாவிடம் கேட்டு வந்தனர். அதற்கு தன்னுடைய கணவர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுள்ளார் எனச் சொல்லி ரஹீமா சமாளித்து வந்துள்ளார். தொடர்ச்சியாக கணவன் குறித்து உறவினர்கள் கேட்டு வந்ததால் எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் தவித்த ரஹீமா தனக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி மருத்துவமனைக்கு சென்று விட்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/17/a4446-2025-07-17-10-12-04.jpg)
சபியல் ரஹ்மான் காணாமல் போனதில் சந்தேகம் இருப்பதாக அவருடைய சகோதரர் கடந்த ஜூலை 12 தேதி காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சபியல் ரஹ்மானை போலீசார் தேடிவந்த நிலையில் கணவன் காணாமல் போனது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது மருத்துவமனையில் இருந்த மனைவி ரஹீமாவிற்கு தெரியவந்தது.
இதனால் கடந்த ஜூலை 13ஆம் தேதி குவஹாத்தியில் உள்ள உள்ள ஜலுக்பாரி காவல்நிலையத்தில் ரஹீமா சரணடைந்தார். தன்னுடைய கணவரை தான் கொலை செய்ததாக ரஹீமா ஒப்புக்கொண்டார். கடந்த ஜூன் 26 ஆம் தேதி இரவு மது போதையில் கணவர் சபியல் ரஹ்மான் வந்த பொழுது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டோம். அதில் நான் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக வீட்டிற்குள்ளேயே 5 அடி ஆழம் பள்ளம் தோண்டி புதைத்து விட்டேன் என சொன்ன ரஹீமாவின் வாக்குமூலத்தை கேட்டு போலீசாரே அதிர்ச்சியடைந்தனர். போலீசார் ரஹீமாவின் வீட்டிற்கு சென்று புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து சபியல் ரஹ்மானின் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
ஒரு நபர் இவ்வளவு பெரிய குழியைத் தோண்டி உடலை எடுத்து புதைப்பதற்கு சாத்தியம் இல்லை என்பதால் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/17/a4447-2025-07-17-10-11-28.jpg)