திருமணத்தை மீறிய உறவு என சந்தேகம்; பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சக ஊழியரின் மனைவி!

woman

Wife of colleague who tied woman to pole and hit her for Suspected of extramarital affair

திருமணமான நபருடன் உறவில் இருந்ததாகக் கூறி பெண் ஒருவரைக் கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசம் மாநிலம், கோதாவரி மாவட்டம் மொகல்லு கிராமத்தைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட பெண். திருமணமாகாத இவர், அந்த பகுதியில் உள்ள கடல் உணவு நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர், அதே நிறுவனத்தில் பணிபுரியும் குட்டுலவரிபாலத்தைச் சேர்ந்த டோங்கோ சுப்பாராவ் என்பவருடன் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக சுப்பாராவ் மனைவியும் அவரது உறவினர்களும் சந்தேகித்துள்ளனர்.

இந்த நிலையில், சுப்பாராவ் மனைவியும் அவரது மனைவியும் கடந்த 16ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது வீட்டிலிருந்து இழுத்துச் சென்றுள்ளனர். கிராமத்தின் மையத்தில் உள்ள கம்பத்தில் அந்த பெண்ணை கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். வலி தாங்க முடியாத அந்த பெண், உதவிக்காக கூச்சலிட்டுள்ளார். இதனை கேட்ட பொதுமக்கள் அங்கு விரைந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரும் வரை, அந்த பெண்ணை பொதுமக்கள் முன்னிலையில் தொடர்ந்து தாக்கியுள்ளனர்.

அதன் பின்னர், காவல்துறையினர் உடனடியாக அங்கு விரைந்து அந்த பெண்ணை விடுவித்து சிகிச்சைக்காக பீமாவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதலில் ஈடுபட்ட சுப்பாராவ் மனைவி உள்பட உறவினர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் முன்னிலையில் ஒரு பெண் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த மாதம், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பம் பகுதியில், வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Andhra Pradesh pole viral video woman
இதையும் படியுங்கள்
Subscribe