உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி மாவட்டத்தின் ஜக்தீஷ்பூர் பகுதியில் உள்ள ஃபசன்கஞ்ச் கச்னாவ் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்சார் அகமது (வயது 38). கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு சபேஜூல் (வயது 40) மற்றும் நஸ்னீன் பானோ (வயது 34) ஆகிய இரு மனைவிகள் உள்ளனர். இருப்பினும், இரு மனைவிகளுக்கும் குழந்தைகள் இல்லாததால், இது தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்தன.

Advertisment

இந்நிலையில், 2025 ஜூலை 9 அன்று இரவு, அன்சார் அகமதுவுக்கும் அவரது இரண்டாவது மனைவி நஸ்னீன் பானோவுக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் பெரும் சண்டையாக முற்றியிருக்கிறது. இதன்ஆத்திரமடைந்த நஸ்னீன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அன்சார் அகமதுவின் பிறப்புறுப்பை அறுத்துள்ளார்.

Advertisment

இதில் பலத்த காயமடைந்த அன்சார் அகமதுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, உடனடியாக ஜக்தீஷ்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது நிலைமை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக ரேபரேலியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நஸ்னீன் பானோ கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisment

கணவருடனான தகராறில் மனைவி இத்தகைய வன்முறையில் ஈடுபட்ட சம்பவம், ஃபசன்கஞ்ச் கச்னாவ் கிராமத்திலும் அமேதி மாவட்டத்திலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.