ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியில் உள்ள சிலுவூரைச் சேர்ந்தவர் சிவா நாகராஜ் (45). இவரது மனைவி லட்சுமி மாதுரி (37). இந்த தம்பதியினருக்கு கடந்த 2017ம் ஆண்டு திருமணமாகிய நிலையில், இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். கணவர் நாகராஜ் வெங்காய வியாபாரம் செய்து வந்தார். மனைவி லட்சுமி, சினிமா திரையரங்கில் டிக்கெட் கொடுக்கும் வேலை பார்த்து வந்தார்.

Advertisment

இதற்கிடையில், சட்டெனப்பள்ளியைச் சேர்ந்த கோபி (35) என்பவருடன் லட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கோபி ஐதராபாத்தில் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்குள் ஏற்பட்ட இந்த பழக்கம் காலப்போக்கில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இந்த நிலையில் லட்சுமி, வெங்காய வியாபாரம் செய்து வந்த தனது கணவரை வற்புறுத்தி, ஐதராபாத்திற்கு ஓட்டுநர் வேலைக்கு அனுப்பி வைத்தார். கணவர் வீட்டில் இல்லாததால் லட்சுமியும் கோபியும் சுதந்திரமாக இருந்து வந்தனர். கோபியும் அடிக்கடி லட்சுமியின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கமாக மாறிப்போனது.

Advertisment

இந்த சூழ்நிலையில், ஐதராபாத்திற்கு வேலைக்கு சென்ற கணவர் நாகராஜ், அந்த வேலை பிடிக்காததால் வீட்டிற்கே திரும்ப வந்துவிட்டார். மீண்டும் அவர் வீட்டிலிருந்தபடியே தனது வெங்காய வியாபாரத்தை பார்த்து வந்தார். கணவர் வீட்டிற்கு வந்தது தங்களுக்கு இடையூறாக இருப்பதால், அவரை தீர்த்துக்கட்ட லட்சுமி திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஒரு நாள் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கணவனுக்கு பிரியாணியை பரிமாறியுள்ளர். அந்த பிரியாணியில் 20 தூக்க மாத்திரைகளை லட்சுமி கலந்துள்ள விஷயம் தெரியாத நாகராஜ், அந்த பிரியாணியை மகிழ்ச்சியாக சாப்பிட்டுள்ளார். இந்த உணவை சாப்பிட்டவுடன் நாகராஜ் மயக்க நிலைக்கு சென்றார்.

இதையடுத்து, இரவு 11.30 மணியளவில் கோபிக்கு போன் செய்து லட்சுமி வீட்டிற்கு வரவழைத்தார். பின்ன கோபி, நாகராஜின் மார்பு மீது அமர்ந்து கைகளை கெட்டியாக பிடித்துக்கொள்ள, லட்சுமி அருகிலிருந்த தலையணையைக் கொண்டு முகத்தில் வைத்து அழுத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து செல்போனில் ஆபாச படங்களை பார்த்துக்கொண்டு இரவு முழுவதும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். பின்னர், கோபி அந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து, காலையில் தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு லட்சுமி தகவல் தெரிவித்தார். சம்பவம் அறிந்து வந்த உறவினர்கள் இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அந்த சமயத்தில் நாகராஜின் காதில் ரத்தம் வழித்ததைக்கண்ட அவரது தந்தை, இந்த இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisment

புகாரையடுத்து, காவல்துறையினர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ அறிக்கையில், அவர் மாரடைப்பால் இறக்கவில்லை, மாறாக மூச்சுத்திணறி இறந்ததாக தெரிய வந்ததையடுத்து லட்சுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், விசாணையின் ஒரு பகுதியாக லட்சுமியின் செல்போனை காவல்துறையினர் சோதனையிட்ட போது கடைசியாக கோபியிடம் பேசியதும், இரவு முழுவதும் ஆபாச படங்கள் பார்த்ததும் தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் லட்சுமியும், கோபியும் சேர்ந்து நாகராஜை கொலை செய்த சம்பவம் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.