புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் உள்ள நமணசமுத்திரம் காவல் சரகம் மல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேலு (55). இவரது மனைவி மகாலெட்சுமி(45), இவர்களது மகள்கள் தமிழ்செல்வி (26), சாரதா(20).

Advertisment

இந்த நிலையில், மனைவி மகாலெட்மியின் நடத்தையின் மீது சந்தேகப்பட்ட பழனிவேலு அடிக்கடி மனைவி மற்றும் அவர்களது மகள்களுடன் சண்டைப் போட்டுள்ளார். இதனிடையே, பழனிவேல் கடந்த மாதம் முதல் திடீரென காணாமல் போயுள்ளார். இது குறித்து உறவினர்கள், மனைவியிடம் கேட்ட போது அவருக்கு கொழுப்புக் கட்டிகள் இருந்ததால் சிகிச்சைக்காக கோவையில் ஒரு மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார். சுமார் 50 நாட்களுக்கு மேலாக காணாமல் போன பழனிவேல் போன் செய்து கூட பேசவில்லை என்று சந்தேகமடைந்த பழனிவேலுயின் சகோதரிக்கு நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Advertisment

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார், மல்லாங்குடி கிராமத்திற்குச் சென்று விசாரனை செய்ய சென்ற போது அங்கு மகாலெட்சுமி மற்றும் அவரது மகள்கள் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. இதனால் போலீசாருக்கும் உறவினர்களுக்கும் சந்தேகம் அதிகமானது. தொடர்ந்து அவர்களை தேடிய போது, மணப்பாறை அருகே ஒரு கிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி மனைவி மற்றும் மகள்களை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சொன்ன தகவல் போலீசார் திடுக்கிட வைத்துள்ளது.

அந்த விசாரணையில் மகாலெட்சுமி கூறியதாவது, என் கணவர் கடந்த மாதம் வழக்கம் போல என்னிடமும் (மகாலெட்சுமி,) மகள் தமிழ்செல்வி ஆகியோரிடம் தகராறு செய்தார் அப்போது அவரை தாக்கிய போது படக்கூடாத இடத்தில் பட்டு இறந்துவிட்டார். என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்ப தான் நம் வீடு அருகிலேயே புதைத்து  விடலாம் என்று முடிவு செய்தோம். மகள்கள் உதவியுடன் குழி தோண்டி புதைத்துவிட்டோம். அவரைக் காணவில்லை என்று உறவினர்கள் கேட்டனர். அவர்களிடம் என் கணவருக்கு கொழுப்புக்கட்டி ஏற்பட்டதால் கோயம்புத்தூரில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி வந்தோம். ஆனால் ரொம்ப நாளாக போனில் கூட பேசவிில்லையை என்று அவரது சகோதரிக்கு சந்தேகம் வந்துவிட்டது என்று கூறிள்ளனர்.

Advertisment

இதனையடுத்து 52 நாட்களுக்குப் பிறகு, மல்லாங்குடியில் அவர்கள் வீடு அருகிலேயே பழனிவேலுவை புதைத்து வைத்திருந்த இடத்தைக் காட்ட, போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் தோண்டி எடுத்தனர். அதே இடத்தில் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்தனர். மேலும் பழனிவேலுவின் மனைவி மகாலெட்சுமி, மகள்கள் தமிழ்செல்வி, சாரதா ஆகியோரை கைது செய்தனர்.