அதிமுக மூத்த தலைவர்களுடன் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி துணைக் குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் அவருடன் சென்ற அதிமுக எம்பிக்கள் தம்பிதுரை, இன்பதுரை, தனபால், சி.வி.சண்முகம் மற்றும் முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
டெல்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்தில் சுமார் அரை மணி நேரம் இந்த ஆலோசனையானது நடைபெற்றது. அப்போது அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் இந்த சந்திப்பானது அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் எடப்பாடி பழனிசாமியை அமித்ஷா சுமார் 15 நிமிடங்கள் வரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதனையடுத்து அமித்ஷாவின் இல்லத்திலிருந்து அதிமுக நிர்வாகிகள் சென்றுவிட்டனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/17/a5261-2025-09-17-11-16-22.jpg)
அதன் பிறகு எடப்பாடி பழனிசாமியிடம் தனியாக 15 நிமிடங்கள் அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மட்டும் தனி வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் என்ற தகவல் வெளியாகியது. இந்நிலையில் அமித்ஷாவுடன் நடந்த சந்திப்பு புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, ' இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் ஐயா உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான பரத் ரத்னா வழங்கிட வேண்டும் என சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன்' என தெரிவித்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/17/a5263-2025-09-17-11-21-10.jpg)
அண்மையில் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற குரலை செங்கோட்டையன் உயர்த்தி இருந்த நிலையில் டெல்லிக்குச் சென்று அமித்ஷாவையும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் செங்கோட்டையன் சந்தித்திருந்தார். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்த்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.