'Why did you join BJP?' - Actress Kasthuri explains the controversy Photograph: (bjp)
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதேநேரம் அரசியல் கட்சிகள் தங்களைப் பலப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. அதன் காரணமாகக் கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் கட்சி மாறி, புதிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து நடிகை கஸ்தூரியும், திருநங்கை நமிதா மாரிமுத்துவும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகை கஸ்தூரியும், நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான திருநங்கை நமிதா மாரிமுத்துவும் இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பெச்சி சிவா முன்னிலையில், பாஜகவில் இணைந்தனர். சமூக செயல்பாட்டாளரான கஸ்தூரி, நமீதா மாரிமுத்துவும் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அரசியல் பயணத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களுடைய அரசியல் பயணம் தமிழக பாஜகவில் தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/15/a4871-2025-08-15-18-02-49.jpg)
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கஸ்தூரி பாஜகவில் சேர்ந்ததற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், ''அதிமுக, பாஜகவில் எனக்கு ஒரு கம்ஃபர்ட் சோன் இருக்கிறது. நான் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு முன்னாள் தமிழக பாஜக தலைவரை பார்த்தேன். அவர் லண்டனில் இருந்த பொழுது எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணினார். அவர் இருக்கும்போது பாஜகவில் நான் இணைவதற்கான முயற்சி நடந்தது. ஆனால் அந்த நேரத்தில் எனக்கு கட்சி அரசியல் வேண்டாம் இயக்கம், பெண்ணுரிமை, சட்ட உரிமை இதுதான் என்னுடைய இலக்கு என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
இன்று கட்சி அரசியலுக்கு வந்து விட்டேன் என்பதற்கும் முக்கிய காரணம் இருக்கிறது. எங்கே போனாலும் நியாயமான ஒரு கேள்வியை தமிழக அரசைப் பார்த்து கேட்டால் உடனே திமுக என்னை 'சங்கி' என திட்டுகிறார்கள். விதவிதமான அரசியல் சாயம் பூசி, தனிமனித அரசியல்வாதி சாயம் பூசி என்னை பேசிக் கொண்டிருந்தார்கள். தூய்மைப் பணியாளர்களுடன் களத்தில் போய் நின்றால் ''நீ யார் அனுப்பி வந்தாய் என்று தெரிகிறது. பாஜகவிற்காக தானே" என்று கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் நியாயத்தை கேட்பதற்கு பாஜகவாக தான் இருக்க வேண்டும் என திமுககாரர்கள் தான் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுடைய சொல்பேச்சை எவ்வளவு நாள் தான் நாங்க மீற முடியும். அதனால் தான் சேர்ந்து விட்டேன்'' என்றார்.
சேவை, மக்கள் பணி வெளியில் இருந்து தனியாக செய்வதற்கும் பிரதமர் மோடியின் பக்கபலம் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆபரேஷன் சிந்தூர் நடந்துபோது 'நான் மோடியின் பக்தை' என வெளிப்படையாக சொன்னேன். அதன் பிறகு பாஜகவில் நான் இணைவது என்னைக்காவது நடக்க வேண்டிய விஷயம் தான். இன்று இணைந்துவிட்டேன்'' என்றார்.