தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் இந்த ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. அந்த வகையில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்முரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார்.
இது கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் தான் புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ள இந்தியா கூட்டணிக்குத் தலைமை யார் என்பதில் சர்ச்சை நீடித்து வருகிறது. அதே சமயம் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா, அக்கட்சியின் கூட்டத்தில் பேசுகையில், “புதுச்சேரியில் யார் தலைமையில் ஆட்சி?. திமுக எவ்வளவு சீட்டு வாங்குவோம்?. எனக் கேட்கிறார்கள். எல்லோருக்கும் ஒரே பதில் தான் கடந்த முறை திமுக 13 தொகுதிகளில் போட்டியிட்டது.
தற்போது அந்த 13 தொகுதிகளைப் பெறுவோம். பெற்றுத் தீருவோம். மேலும் கூடுதலாக ஆறு தொகுதி கேட்போம். திமுக வளர்ந்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரைச் சொல்லித்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தார்கள். எனவே கூடுதல் தொகுதிகளைக் கேட்கக்கூடிய எல்லா உரிமையும் இருக்கிறது. அதேசமயம் கூட்டணிக் கட்சியைக் குறித்துப் பேசவில்லை. புதுச்சேரியில் திராவிட முன்னேற்றத்தின் தலைமையில் ஆட்சி அமையும்” எனப் பேசியிருந்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/06/py-20214-election-date-2026-02-06-14-51-39.jpg)
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் இது தொடர்பான செய்தியை மேற்கோள்காட்டி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கூட்டணியில் 8 % ஒட்டு வைத்து உள்ள கட்சி தலைமை தாங்குமா?. இல்ல 26% உள்ள கட்சி தலைமை தாங்குமா?. ஏன் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி(யை) இழிவாக பேச வேண்டும்?. தொடரும் இந்த முறை நல்லது இல்ல?” என எச்சரிக்கும் விதத்தில் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/06/manickam-tagore-mp-mic-py-con-dmk-2026-02-06-14-51-07.jpg)