Advertisment

'ஒரத்தநாடு' சீட் யாருக்கு ?-பரபரப்பில் தஞ்சை திமுக

1026

dmk Photograph: (election 2026)

திமுகவில் சீட் கேட்டு விருப்பமனு கொடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தபடி இருக்கிறது. இதனால் பரபரப்பாகவே இருந்து வருகிறது அறிவாலயம். இந்நிலையில் முக்கிய தொகுதிகளில் யாருக்கு சீட் கிடைக்கும் என்கிற விவாதங்களும் அறிவாலயத்தில் குவியும் உடன்பிறப்புகள் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது.

Advertisment

குறிப்பாக, தேர்தலை முன்னிட்டு அதிமுகவை சேர்ந்த பிரபலங்களை கட்சியில் சேர்த்து வருகிறது திமுக. இதனால், பல்வேறு தொகுதிகளில் பாரம்பரிய திமுக வினருக்கு சீட் கிடைக்குமா? கிடைக்காதா? என்கிற பதட்டமும் நிலவுகிறது. அப்படியொரு தொகுதிதான் தஞ்சை மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு.

Advertisment

இந்த தொகுதியில் 90 சதவீதம் கள்ளர் சமூகத்தினர் அடர்த்தியாக இருக்கிறார்கள். மீதமுள்ள 10 சதவீதம் தான் மற்ற சமூகத்தினர் வாழ்கின்றனர். கள்ளர் சமூகத்தினரை தவிர்த்து ஒரத்தநாடு தொகுதியில் எந்த கட்சியும் மாற்று சமூகத்தினரை நிறுத்தியதில்லை. ஒரத்தநாடு தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அதிமுக வைத்தியலிங்கம். அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட போது, அவரோடு சேர்ந்து வைத்தியலிங்கத்தையும் நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. அதன் பிறகு, எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் ஓபிஎஸ்சை போலவே வைத்தியலிங்கத்தையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார் எடப்பாடி.

1025
dmk Photograph: (election2026)

இனியும் ஓபிஎஸ்சை நம்பி அரசியல் செய்ய முடியாது என முடிவு செய்து சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார் வைத்தியலிங்கம். திமுகவில் இணைந்ததும் தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், மீண்டும் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட தமக்கு திமுக தலைமை சீட் வழங்கும் என்கிற ஏக எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார் வைத்தியலிங்கம். அதேபோல், திமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும் ஒரத்தநாடு தொகுதியில் திமுகவின் ஆணிவேராக இருப்பவருமான சந்திரசேகர், தனது மகன் டாக்டர் நரேந்திரனுக்காக சீட் கேட்டுள்ளார். இதற்காக, விருப்பமனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒரத்தநாடு தொகுதியில் சந்திரசேகரின் குடும்ப வகையறாதான் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். ஒரத்தநாடு தொகுதி உருவானதிலிருந்து இதுவரை பட்டதாரி இளைஞர்கள் எந்த ஒரு கட்சியிலும் யாரும் போட்டியிட்டதில்லை. முதன் முறையாக டாக்டர் படிப்பு படித்த இளைஞர் நரேந்திரன் சீட கேட்டு விண்ணப்பித்துள்ளார். 2026 தேர்தலில் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு பெரும்பாலும் வாய்ப்பளிக்க வேண்டும் என திமுகவில் பரவலாக குரல் இருந்து வரும் நிலையில், தொழில் படிப்பு படித்த பட்டதாரி இளைஞர் நரேந்திரன் சீட் கேட்டிருப்பது திமுகவில் உற்று கவனிக்கப்படுகிறது. நரேந்திரனின் தந்தை சந்திரசேகர், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திமுகவின் சீனியர்கள் மத்தியிலும் கள்ளர் சமூகத்தினர் மத்தியிலும் செல்வாக்குப் பெற்றவராக இருந்து வருகிறார் என்று சொல்கின்றனர் உடன்பிறப்புகள்.

இந்த சூழலில், வைத்தியலிங்கத்துக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குகள் இருந்து வருவதால், அவருக்கு சீட் ஒதுக்கப்படுகிறதா? என்பதை அமலாக்கத்துறை யினரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கவனித்து வருகின்றனர். இதனால் ஒரத்தநாடு தொகுதியில் யாருக்கு சீட்  கிடைக்கும் என பட்டிமன்றம் நடக்கிறது.

Thanjavur orathanadu admk vaithilingam dmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe