'Who will buy liquor first at TASMAC?' - A clash broke out during a competition; Mother was brutally attacked in front of her Photograph: (KARUR)
டாஸ்மாக் கடையில் யார் முதலில் மது வாங்குவது என ஏற்பட்ட மோதலில் இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து ஒரு இளைஞரை தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 'அடிக்காதீங்க..' என இளைஞரின் தாய் கதறி துடிக்கும் காட்சிகள் பார்ப்போர் மனதை கலங்க வைத்தது.
கரூர் மாவட்டம் புலியூர் பகுதியில் பட்டப்பகலில் சாலையில் இளைஞர்கள் சிலர் மோதிக்கொண்டனர். பரபரப்பாக பேருந்துகள் சென்ற சாலையில் நடந்த இந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு கும்பல் வில்சன் என்ற இளைஞரை தாக்கிய நிலையில் மகனை அடிக்காதீர்கள் என தாயும் அந்த இளைஞரை கட்டிப்பிடித்துக்கொண்டு நடுசாலையில் அழுதார். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் அந்த இளைஞர் கும்பல் மகனோடு சேர்ந்து தாயையும் கொடூரமாக தாக்கினர்.
இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தலையில் காயம் ஏற்பட்டு ரத்தப்போக்கு ஏற்பட்ட பின்னரே அந்த கும்பல் அங்கிருந்து சென்றது. இந்த சம்பவத்தின் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் டாஸ்மாக் கடையில் யார் முதலில் மது வாங்குவது யார் என்று ஏற்பட்ட மோதலில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.