Who was the person attacked by Vijay's bouncers? - Two rival youths Photograph: (tvk)
மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு கடந்த 21.08.2025 அன்று நடைபெற்றது. சுமார் 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு அக்கட்சி நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் அமர்வதற்கு 200 இருக்கைகள் போடப்பட்டன. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டு மேடைக்கு வந்த விஜய் தனியார் பவுன்சர்கள் புடைசூழ ராம்ப் வாக் செய்தார். அப்போது விஜய்யை நோக்கி ஓடிவந்த பல தொண்டர்கள் பவுன்சர்களால் தடுக்கப்பட்டனர். அப்போது இளைஞர் ஒருவரை பவுன்சர் ஒருவர் தூக்கி கீழே எறிந்த நிலையில் அந்த இளைஞர் தலைகீழாக விழுந்த காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இளைஞரை தூக்கி வீசிய பவுன்சர்கள் மற்றும் விஜய் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் மற்றும் அவரது தாய் புகார் அளித்தனர். தன்னை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வீசியதாகவும், தனக்கு காயம் ஏற்பட்டதாகவும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகனிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் மற்றும் அவருடைய பவுன்சர்கள் உள்ளிட்டோர் மீது குன்னம் காவல் நிலையத்தில் தகாத வார்த்தைகள் பேசுவது, அத்துமீறுவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/28/a4985-2025-08-28-10-06-52.jpg)
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் உண்மையிலேயே தூக்கி வீசப்பட்ட இளைஞர் யார் என்பது கேள்வியாகியுள்ளது. பவுன்சர்கள் கீழே தள்ளிய சம்பவம் வைரலான நிலையில் போலீசில் புகார் அளித்திருக்கும் சரத்குமார் என்ற அந்த இளைஞர் புகார் கொடுப்பதற்கு முன்னதாக 'அது தான் இல்லை' என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். புகாருக்கு பிறகு சரத்குமார் 'யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக அது நான் இல்லை என்று வெளியிட்டேன். தாக்குதலுக்கு உள்ளானது நான் தான்' என தெரிவித்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/28/a5004-2025-08-28-10-13-18.jpg)
அதேநேரம் தவெக மாநாட்டிற்கு பெரம்பலூரை சேர்ந்த சரத்குமார் வரவில்லை என அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த சிவக்குமார், ''சரத்குமாரின் அம்மா பேட்டி கொடுத்திருந்தார்கள். அதைப் பார்த்துவிட்டு அந்த நபரை நான் தொடர்பு கொண்டேன். தாக்கப்பட்டது நான் இல்லை என்று சொன்னார். ஆனால் இப்பொழுது இப்படி பேசுகிறார். யாருடைய தூண்டுதலில் இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை'' என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/28/a5005-2025-08-28-10-14-06.jpg)
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரைச் சேர்ந்த அஜய் என்பவர் அந்த மாநாட்டில் பவுன்சர்களால் தாக்கப்பட்டது நான்தான். தேவை இல்லாமல் விஜய் மீது கேஸ் கொடுக்கிறார்கள். நான் இதை கண்டிப்பாக உறுதிப்படுத்தி காட்டுவேன். விஜய் மீது புகார் கொடுத்த இரண்டு பேரையும் விடவே கூடாது. தூக்கி ஜெயிலில் வைக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.