புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசுப் போக்குவரத்துக் கழக கிளையிலிருந்து புதுக்கோட்டையில் இருந்து கொத்தமங்கலம் வரை அரசு நகரப் பேருந்து தடம் எண் 3 இயக்கப்படுகிறது. வழக்கம் போல இன்று புதன்கிழமை இரவு கொத்தமங்கலம் வந்து அங்கிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு புதுக்கோட்டை நோக்கிச் சென்றுள்ளது.

Advertisment

இந்நிலையில் ஆலங்காடு கிராமத்தில் பறமடக்கி பிரிவுச்சாலை அருகே செல்லும் போது முன்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் பேருந்துக்கு பின்னால் சென்று கல் வீசி விட்டு வேகமாக சென்றுள்ளனர். சத்தம் கேட்டு பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்திப் பார்த்தபோது பேருந்தின் பின்புறம் கண்ணாடி உடைந்து பேருந்துக்குள் இருந்த ஒரு பயணி மீது கல் அடிபட்டு காயமடைந்துள்ளார்.

Advertisment

மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பேருந்து கண்ணாடி மீது கல்வீசி தாக்கி உடைத்து விட்டு தப்பிச் சென்று விட்டது பேருந்து அதே இடத்தில் நிறுத்தப்பட்டதாக ஆலங்குடி பணிமனைக்கு வடகாடு போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் பயணிகளை மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பணிமனை அலுவலர்கள், வடகாடு போலீசார் பேருந்தை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அந்த சாலையில் உள்ள கண்காணிப்பு  கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கண்காணிப்பு கேமராக்களில் பேருந்து கண்ணாடி உடைத்துச் தப்பிச் சென்றவர்கள் முகம் பதிவாகி இருக்கும் என்கின்றனர் கிராம மக்கள். மேலும் இதே போன்ற சம்பவம் அடிக்கடி நடப்பதால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

Advertisment