Advertisment

2026-27 ம் ஆண்டிற்கான பட்ஜெட்; எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?

bidg

Which items will see prices decrease on Budget for 2026-27

நாடாளுமன்றத்தில் 2026-27 ம் ஆண்டிற்கான நேற்று (01-02-26)  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் கொண்டுவரப்பட்டுள்ள பல்வேறு வரி மாற்றங்கள் பலதரப்பட்ட பொருட்களின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளன. இந்த பட்ஜெட்டானது சாமானிய மக்கள் முதல் பெரும் முதலாளிகள் வரையிலான அனைத்து தரப்பினருக்கும், பல்வேறு நிறை குறைகளுடன் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த பட்ஜெட்டில் ஆரோக்கியம் மற்றும் தொழில் நுட்பத்துறை போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக்  கூறப்படுகிறது.

Advertisment

அந்த வகையில், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் அரிய வகை நோய்களுக்கான மருந்து பொருட்களின் மீதான சுங்க வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இத்தகைய மருந்து பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப்கள் போன்ற மின்னணு சாதனங்களின் உதிரிப் பாகத்தின் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால், இத்தகைய மின் சாதனங்களின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

மேலும், வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மற்றும் கல்விக்காகப் பணம் அனுப்புவோருக்கான டி.சி.எஸ் வரியானது 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சோலார் பேனல் மற்றும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி பாகங்களின் மீதான வரி விலக்கின் காரணமாக, இத்தகைய பொருட்களின் விலையும் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், சொகுசு கைக்கடிகாரங்கள் மற்றும் மதுபானங்கள் போன்ற பொருட்களின் விலை அதிகமாகும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

PARLIAMENT SESSION Budget 2026
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe