Advertisment

பெற்ற குழந்தையை அரசு மருத்துவமனையில் தவிக்கவிட்டு சென்ற பெண் எங்கே?

AAA

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் அருகே மதகம் திராபிடிங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல் (45). இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆவணத்தான்கோட்டை அருகே உள்ள மாளிகைபுஞ்சை கிராமத்தைச் சேர்ந்த காளியம்மாள் (39) என்பவருடன் திருமணமாகி 14 வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது. வடிவேல் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்தவர் கடந்த சில ஆண்டுகளாக சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் காளியம்மாள் மீண்டும் கர்ப்பமாகி கடந்த 26 ந் தேதி அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார். அன்றே அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுடன் வடிவேலின் தாயார் சிந்தாமணி (70) துணைக்கு மருத்துவமனையில் உள்ளார். அறுவை சிகிச்சை என்பதால் ஒரு வாரத்திற்கு பிறகே வீட்டிற்கு அனுப்புவதாக கூறி சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் இன்று வெள்ளிக் கிழமை மதியம் காளியம்மாள் ஒரு டெஸ்ட் எடுப்பதற்காக தனது குழந்தையை மாமியார் சிந்தாமணியை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு மாடியில் இருந்து கீழே வந்தவர் நீண்ட நேரமாகியும் மீண்டும் வார்டுக்கு வரவில்லை. அதன் பிறகு அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடியும் கிகை்கவில்லை. 

மருத்துவமனையில் உள்ள போலீசார் விசார செய்த போது சிகிச்சையில் இருந்த வெள்ளை உடையுடன் ஒரு பெண் மட்டும் கோங்குடி செல்லும் அரசு நகரப் பேருந்தில் ஏறிச் சென்றதாக கூறியுள்ளனர். இந்த தகவலையடுத்து அவரது உறவினர்கள் கோங்குடி வரை தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. 

மேலும், ஏதோ விரக்தியில் வெளியேறிய காளியம்மாள் தனது தாய் ஊரான மாளிகைபுஞ்சைக்கு செல்ல பஸ் ஏற வந்தவர் வேறு பேருந்தில் ஏறியதால் மூக்குடி கிராமத்தில் பாதி வழியில் இறங்கிவிட்டதாவும் சிலர் கூறியுள்ளனர்.\நள்ளிரவு வரை அவரது உறவினர்கள் எங்கு தேடியும் காளியம்மாளை கண்டுபிடிக்க  முடியாததால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது. மேலும், உறவினர்களும் போலிசாரும் தேடி வருகின்றனர்.

hospital police puthukottai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe