தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு குறித்த அறிவிப்பை அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழக முதலமைச்சரும், திமுகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில், தலைமைக் கழக அனுமதியுடன் திமுக இளைஞர் அணிக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிளை வார்டு பாகங்களில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட கட்சியின் 28 மாவட்டங்கள், 91 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1,50,000 நிர்வாகிகளை திருவண்ணாமலையிலும் தென் மண்டலத்துக்கு உட்பட்ட 20 கட்சி மாவட்டங்கள் 58 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 1,00,000 நிர்வாகிகளை விருதுநகரிலும் சந்தித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இதைத் தொடர்ந்து வருகிற 22.02.2026 (ஞாயிற்றுக்கிழமை), மாலை 3.00 மணி அளவில், கோவை, கருமத்தம்பட்டி, கணியூர் டோல்கேட் அருகில் மேற்கு மண்டல தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது.
இதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ. ராசா எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கரூர் திமுக மாவட்டக் கழகச் செயலாளர் வி.செந்தில்பாலாஜி வரவேற்புரையாற்றுகிறார். திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதில், மேற்குமண்டலத்தைச் சேர்ந்த திமுக மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், கிளை மற்றும் வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து வரலாறு படைத்திட அந்தந்த மாவட்டக் திமுக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து இளைஞர் அணி நிர்வாகிகளை மேற்குமண்டல நிர்வாகிகள் சந்திப்பிற்கு" அழைத்து வரும் பொறுப்பினை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/18/udhay-dmk-speech-2026-02-18-10-16-37.jpg)
வரலாறு படைக்கப் போகும் இந்த தி.மு.க. இளைஞர் அணி மேற்குமண்டல நிர்வாகிகள் சந்திப்பில் அமைச்சர்கள் சு. முத்துசாமி, அர. சக்கரபாணி, மா. மதிவேந்தன், என். கயல்விழி செல்வராஜ், மேற்கு மண்டல மாவட்டச்செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தென்மண்டல இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், மாநகர அமைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். இறுதியாக திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் கே.இ. பிரகாஷ் எம்.பி. நன்றியுரையாற்றுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/18/dmk-youth-wing-meeting-2026-02-18-10-15-50.jpg)