மனைவியின் செல்போன் எப்போதும் பிஸியாக இருந்ததால் காதல் கணவனே மனைவியை கொலை செய்த கொடூர சம்பவம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்துள்ளது சிலாவட்டம் பகுதி. இங்கு வசித்து வருபவர் சரண்(24) இவர் வீட்டுக்கு அருகிலேயே வசித்து வந்த மதுமிதா (19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு இருதரப்பு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் வீட்டை விட்டு வெளியேறி போராடி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

Advertisment

திருமணத்திற்கு பிறகும் வீட்டார் ஏற்றுக்கொள்ளாததால் கடந்த நான்கு மாதங்களாக தனியாக வசித்து வந்தனர். சரியாக வேலைக்குச் செல்லாத சரண் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகவும் வழிபறியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக நான்கு முறை காவல்துறையில் சரண் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வெளியூருக்கு சென்றிருந்த சரண் தன்னுடைய மனைவி மதுமிதாவை செல்போனில் அழைத்துள்ளார். பலமுறை அழைத்தும் பிஸி பிஸி என வந்ததால் அவர் ஆத்திரம் அடைந்துள்ளார். இதனால் காதல் மனைவி முறையற்ற தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்ட சரண் கொலை செய்யும் நோக்கில் புதிய கத்தி ஒன்றை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். ஏன் என் செல் போன் அழைப்பை எடுக்கவில்லை எனக் கேட்டுள்ளார்.

Advertisment

தன்னுடைய தோழியிடம் பேசிக் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இருந்தாலும் சரண் அதனை நம்பவில்லை. கோவிலுக்கு போகலாம் என அனந்தமங்கலம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வனப்பகுதியை ஓட்டியுள்ள கோயிலுக்குள் மதுமிதாவை அழைத்துச் சென்ற சரண்  மறைத்து வைத்திருந்த புதிய கத்தியை எடுத்து சரண் அங்கேயே துள்ளத் துடிக்கக் கொலை செய்துவிட்டு பின்னர் போலீசாரில் சரணடைந்துள்ளார்.