Advertisment

''எல்லா பக்கமும் அந்த சத்தம் கேட்கும் போது...''-நக்கீரனிடம் பகிர்ந்த பஹ்ரைன் தமிழர்

1022

war Photograph: (tention)

அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்ற அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியடைந்ததை அடுத்து, இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. தொடர்ந்து, அமெரிக்க நட்பு நாடுகளான பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
இந்நிலையில்  பஹ்ரைனில் வாழ்ந்து வரும் புஷ்பபாரதி ஸ்ரீனிவாசன் அங்கு நிலவும் சூழல்களில் எக்ஸ்க்ளூசிவ்வாக நக்கீரனிடம் பகிர்ந்து கொண்டார்.  
Advertisment
பஹ்ரைன் ஒரு அமைதியான ஒரு இடம் என்று சொல்லலாம். கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் இங்கு வாழ்கிறார்கள். அதில் இந்தியர்கள் மட்டும் 3 லட்சம் பேர் இருக்கிறார்கள். வாழ்வதற்கு நல்ல அமைதியான இடம். ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த மூன்று நாட்களாக இப்படி போய்க் கொண்டிருக்கிறது. நேற்று முந்தினம் 28ஆம் தேதி பிரச்சினை ஆரம்பித்தது. இதனால் கட்டிடங்கள் சேதம் ஆகிய. உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றெல்லாம் செய்திகள் வந்தது. அதன் பிறகு அமைதியாக தான் இருந்தது. நேற்றைய எதுவும் இல்லை. ஆனால் இன்று காலையில் இருந்து திரும்பவும் ஆரம்பித்திருக்கிறார்கள். சத்தங்கள் கேட்க தொடங்கி விட்டது. நான் இருக்கும் வீட்டுக்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இடது பக்கம் அமெரிக்க தூதரகம் இருக்கிறது. இரண்டு கிலோமீட்டர் வலது பக்கம் நேவல் பேஸ் இருக்கிறது.  
இன்று காலை வாக்கிங் போயிட்டு வந்து கொண்டிருந்த போது சத்தம் கேட்டது. இங்கு யு.எஸ் நெவிக்கு கப்பல் நிறுத்தும் இடமும், சரி செய்கிற இடமும் உள்ளது. அதை இரண்டையும் நொறுக்கி விட்டார்கள். அதில் ஒருவர் இறந்துவிட்டதாக சொல்கிறார்கள். யார் என்ன என்ற விவரம் தெரியவில்லை. எதிர்பார்க்காத சூழல். யாரோ இருவர் சண்டை போட்டுகொண்டுள்ளார்கள். அவர்களுக்கு இடையே இந்த மாதிரி நாடுகள் அவஸ்தைப்படுகிறது. இதில் முக்கியமானது என்னவென்றால் பஹ்ரைன், துபாய் எல்லாம் அமைதியான இடங்களுக்கு பெயர் போனவை. அமைதியாக இருக்கும், பாதுகாப்பாக இருக்கும் என்ற எண்ணம் உண்டு. ஆனால் இரண்டு நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் வருத்தத்தை கொடுத்துள்ளது. ரொம்ப கஷ்டம் இது.
போர்கள் தாக்குதல்கள் குறித்து நாம் படித்திருப்போம். அதை படிக்கும் போது சிலவை ஆர்வமாக இருக்கும் சிலவை வருத்தமாக இருக்கும். ஆனால் நேரில் அதைப் பார்க்கும் போது பதற்றமும் இருக்கும். இந்த பக்கமும் அந்த பக்கமும் சத்தங்கள் கேட்கும் போது அதுவும் வெடிகுண்டு சத்தம் கேட்கும்போது என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியவில்லை. சாதாரண மனிதர்களுக்கு கண்டிப்பாக போர் பதற்றம் இருக்கும். இங்கிருந்து ஊருக்கு போய்விடலாம் என நினைப்பவர்கள் கூட போக முடியாது. எல்லா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
dubai America israel iran war
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe