10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார். 

Advertisment

இது தொடர்பாகத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவிக்கையில், “அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்குப் பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடர்பான அட்டவணை வெளியிடப்படும்” என்று தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழகத்திற்கென தனியாகத் தயாரிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி (08.08.2025) வெளியிட்டார். 

Advertisment

அதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ரொம்பமாநில கல்விக் கொள்கை இந்த கல்வியாண்டு முதலே அமலுக்கு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என்பதற்காக தற்போது அமலில் உள்ள 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இந்த கல்வியாண்டு (2025 - 26) முதலே ரத்து செய்யப்படுகிறது. எனவே இனி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே னி பொதுத்தேர்வு நடத்தப்படும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.