When will the decision be made in the two leaves case? - Court condemns the Election Commission Photograph: (admk)
இரட்டை இலை வழக்கில் 23 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு கொடுத்தும் இரண்டு வருடம் தாமதம் செய்ததற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இரட்டை இலை சம்பந்தமாக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த வா.புகழேந்தி தொடுத்திருந்த வழக்கு புதுடெல்லி உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. சென்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் புகழேந்தி கொடுத்திருந்த இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் உடனடியாக விசாரித்து பின்னர் இரட்டை இலையை ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது. ஆனால் தேர்தல் ஆணையமோ அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. பின்னர் விசாரணைக்கு வரும்போது உடனடியாக நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மீண்டும் தாமதமானதால் புகழேந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதில் உடனடியாக பதிலளிக்க நீதிமன்றம் தேர்தல் ஆணையர்கள் மூவருக்கும் உத்தரவிட்டதோடு கண்டனத்தையும் தெரிவித்தது. இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் சின்னம் தொடர்பான வழக்கில் விசாரித்து இருப்பதாக கூறியது. இதனை புகழேந்தி தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஆணையை அவமதித்துள்ளதாகவும், இதன் மீது நடவடிக்கை எடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி இரட்டை இலை சின்னத்தை நிலுவையில் உள்ள சிவில் நீதிமன்ற வழக்கு முடியும் வரை தடை செய்ய வேண்டும் என்று மீண்டும் கூறப்பட்டது.
இந்த முக்கிய வழக்கு நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வந்தது. வா.புகழேந்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் திருமூர்த்தி, மனோ செல்வராஜ், அகிலன், கனிமொழி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். இரண்டு வருடங்களாக ஏன் இந்த மவுனம். ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தேர்தல் ஆணையத்தை கண்டித்த நீதிபதி, வரும் 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
Follow Us