பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 14ஆம் தேதி (14.08.2025) காலை 11 மணி அளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் துறை அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர். 

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்குதல், சுதந்திர தின அறிவிப்புகள், அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு வர உள்ள முக்கிய தொழில் திட்டங்கள் குறித்தும், விரிவாக்கப்பட உள்ள தொழிற்சாலை பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.