'Whatever happens to Trisha, she is to blame' - a complaint that caused a stir Photograph: (police)
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது புகார் அளிக்க வந்த தவெக கட்சியின் நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''திமுகவில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்று ஒரு பேச்சாளர் இறக்கிறார். அவர் சமீபமாக 27/1/2025 அன்று நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் பற்றிய பொது மீட்டிங்கில் விஜய்யை பற்றியும், விஜய்யின் தாயாரை பற்றியும் மற்றும் விஜய் நண்பர் திரிஷாவை பற்றியும் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் பற்றியும் மிக கொச்சையான வார்த்தைகளில் பேசுகிறார். மற்றொன்று ஐயர் கம்யூனிட்டியை பற்றி மிகக் கொச்சையான வார்த்தைகளால் பேசியுள்ளார்.
அவர் மேல் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்குமாறு தலைமை கேட்டுக்கொள்கிறேன். இதற்கு முன்னாடியும் அவர் இதே மாதிரி பேசி ஜெயிலுக்கு எல்லாம் போயிட்டு வந்திருக்கார். திரும்ப திரும்ப இதையே பண்ணிட்டு இருக்கார். ஏற்கனவே கைது பண்ணி சிறைக்கு போயிருக்காரு.
விஜய்யை 'நார் நாரா கிழித்துத் தொங்க விடுவேன்' என்று பயங்கரமாக கொலை மிரட்டல் விடுகிறார். உடனே நம்ம கமிஷனர் நாலேட்ஜக்கும், லோக்கல் போலீஸ் ஸ்டேஷனும் கொண்டு வரணும் என்பதற்காக நான் இந்த கம்ப்ளைன்ட் கொடுக்க வந்திருக்கேன். அவர் திரும்ப இப்படி பேசுவதற்கு அவங்க கட்சிக்காரங்களே ஊக்கத்தை கொடுக்கறாங்க. இனிமேல் இந்த மாதிரி பொதுவெளியில் பேசக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
விஜய்யை பற்றியும் அவர் நண்பர் திரிஷா பற்றியும், எங்க கழக உறுப்பினர் பெண்களை பற்றியும் இனிமேல் இந்த மாதிரி வார்த்தைகளே அவர் வாயில் இருந்து வரக்கூடாது சார். இனிமேல் த்ரிஷாவுக்கு எது நடந்தாலும் அதற்கு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தான் காரணம். எங்க விஜய்க்கு எது நடந்தாலும் அவர்தான் காரணம்'' என்றார்.
Follow Us