தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதைக் கண்டுகொள்ளாமல் இருத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், தனியார் சொத்துக்கள் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் த.வெ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான காவல்துறை விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூரில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், செந்தில் பாலாஜியுடன் சென்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் உயிரிழந்தோர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

 

a5420
What is your advice to Vijay? - Kamal's answer Photograph: (kamalhasan)

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் பேசுகையில், ''எல்லோரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எல்லோருக்கும் மனம் வருத்தம் இருக்கிறது. தயவுசெய்து சொல்ல வேண்டியாருக்கு நன்றி என்று சொல்லி விடுங்கள். முக்கியமாகப் பத்திரிகையாளர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியதால் தான் உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்திருக்கிறது. இது என்ன காலகட்டம் என்றால் 'யார் உண்மை?' என்ற காலகட்டமாகி போயிடுச்சு . உண்மை என்பது ஒரு பொருள் அல்ல, பல பார்வையில் பல பொருளாக தெரியும் என்ற இந்த காலகட்டத்தில் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீதிமன்றமும் இருக்கிறது காவல்துறை இருக்கிறது.
போலீசாருக்கு நன்றி சொல்ல வேண்டிய நேரத்தில் அவர்களை குற்றம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். நானும் இந்த மாதிரியெல்லாம் வந்திருக்கிறேன். அவர்களுடைய கடமையை அவர்கள் செய்கிறார்கள். அதனால் தயவுசெய்து இதுவரையிலும் இந்த உயிர்ச்சேதத்துடன் நின்னதே என சொல்ல வேண்டியவர்களுக்கு எல்லாம் நன்றி சொல்லிக் கொள்கிறேன்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'லைட் ஹவுஸ் பகுதியில் சென்று பார்த்தீர்களே இந்த இடத்தை விட அந்த இடம் சிறந்ததா?' எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ''மரணத்திற்கு எந்த இடமும் சிறந்தது இல்லை. இங்கு இது பெரிதாகாமல் இதை உடனே நிறுத்திக் கொண்டோமே என்பது சந்தோஷம். அங்கு அனுமதி கொடுத்திருந்தால் நதியில் மக்கள் மூழ்கியிருந்தால் என்ன செய்வார்கள். இதில் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். இதில் சைடு எடுக்காதீர்கள். சைடு எடுப்பதாக இருந்தால் மக்கள் பக்கம் சைடு எடுங்கள்'' என்றார்.
'விஜய்க்கு உங்களுடைய அட்வைஸ் என்ன? என்ற கேள்விக்கு, ''அதெல்லாம் கோர்ட்டில் சொல்வார்கள்'' என்றார்.
Advertisment