தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில், அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு புதிய விதிகளை வகுக்கக் கோரியும், சிபிஐ விசாரணை கோரியும், சில இழப்பீடு வழங்கக் கோரியும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிமணி ஆகியோர் அமர்வு முன்பு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘பொதுக்கூட்டம் தவிர்த்து எந்த கூட்டமானாலும், மாநில தேசிய நெடுஞ்சாலைகள் அருகே நடத்தப்படக் கூடாது. பொதுக்கூட்டங்களின் போது குடிநீர், மருத்துவம், ஆம்புலன்ஸ், கழிவறை போன்ற அடிப்படைத் தேவைகளைச் செய்து தரப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று கடுமையாக உத்தரவிட்டனர். அதே போல், அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரும், அதுவரை எந்த கட்சிகளுக்கும் ரோட் ஷோ-க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச். தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், அரசியல் கட்சிகளின் ரோட் ஷோக்களுக்கு தமிழக அரசு வழிமுறைகளை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இத்தகைய சூழலில் தான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து அவருடைய பிரச்சார சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதே சமயம், சேலத்திலிருந்து விஜய்யின் பரப்புரை மீண்டும் தொடங்கப்படும் என அக்கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் சேலம் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று (20.11.2025) மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் வரும் டிசம்பர் 4ஆம் தேதி சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம், கெஜல்நாயக்கன்பட்டி ஆகிய 3 இடங்களில் உள்ள ஏதேனும் ஒரு இடத்தில் விஜய் மக்களைச் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/20/tvk-vijay-sad-2025-11-20-15-50-23.jpg)
இருப்பினும் டிசம்பர் 4ஆம் தேதி கார்த்திகை தீபம் என்பதால் அன்றைக்கு அனுமதி வழங்க முடியாது என மாநகர காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு டிசம்பர் 6ஆம் தேதி இது பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் அன்றைய தினம் அதிகப்படியான காவல் துறையினர் கூடுதல் பாதுகாப்புக்குச் செல்ல உள்ளதால் இந்த டிசம்பர் 4ஆம் தேதி அனுமதி வழங்க முடியாது என மாநகர காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/20/tvk-vijay-sad-1-2025-11-20-15-49-30.jpg)