நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியாகவில்லை. இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் படத்திற்கு சான்று வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
நேற்று நடைபெற்ற வழக்கில் காரசார வாதங்கள் நடைபெற்றது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கருணாஸிடம் செய்தியாளர்கள் 'விஜய் இரண்டு முறை சிபிஐ விசாரணைக்கு போயிருக்கிறார். அவரை பாஜக கூட்டணிக்கு கொண்டு செல்ல முயற்சி என சொல்கிறார்கள்' என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கருணாஸ், 'இதில் பாஜகவின் தலையீடு இருக்கிறதா இல்லையா என்பது குறித்து விஜய் தான் கேட்க வேண்டும். அவர் தான் சொல்லணும். எதற்குமே வாயை திறக்க மாட்டேன் அப்புறம் என்னத்துக்கு. டப்பிங்கில் மட்டும் தான் பேசுவேன் என்றால் எப்படி. என்ன இது?' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/21/718-2026-01-21-09-18-35.jpg)