தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு சென்று திடீர் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் மா.சு, இதய சிகிச்சைக்காக மாத்திரை எடுத்துக்கொண்ட பெண் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவமனையில் சரியான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா? மருந்து இருந்ததா என்பது குறித்து விசாரித்தார்.
பின்னர் மருத்துவமனையின் உயர் அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர்,' இதயம் காப்போம்' திட்டத்தின் கீழ் மருந்துகள் கிடைக்கும் என்ற போர்டு வைக்க சொன்னேன் அதுவும் இல்லை. நாய்க்கடி, பாம்புக்கடிக்கு மருந்து கிடைக்கும் என மக்களுக்கு தெரியும்படி போர்டு வைக்க சொன்னேன் அதுவும் இல்லை. மூணு வருஷமா என்ன பண்ணிட்டு இருக்கீங்க. எல்லா மீட்டிங்களையும் வைக்க சொல்லி சொல்லிருக்கோம். நாய்க்கடி, பாம்புக்கடிக்கு மருந்து இருக்கிறது என மக்களுக்கு தெரிய வேண்டும். மூணு வருஷமா வைக்காம என்ன பண்றீங்க. இது ரொம்ப சின்ன வேலைங்க. ஒரு பிளக்ஸ் வைக்க மூணு வருஷமா? பாம்புக்கடிக்கு, நாய்க்கடிக்கு மருந்துகிடைக்கும்னு போர்ட் வைக்கவா மூணு வருஷம் ஆகுது. உடனே போர்டு வச்சிட்டு அதை போட்டோ எடுத்து எனக்கு அனுப்புங்க'' என கடிந்து கொண்டார்.