What happened to the Earth? - Published research results Photograph: (EARTH)
2001ஆம் ஆண்டிலிருந்து பூமியின் வடக்கு அரைக்கோளத்தின் வெப்பம் ஏற்கும் திறன் ஒவ்வொரு பத்து ஆண்டிற்கும் ஒரு சதுர மீட்டருக்கு 0.34 வாட்ஸ் என்ற அளவிற்கு அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. PNAS இதழின் ஆய்வுப்படி இந்த முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இது சிறிய அளவிலான மாற்றமாக நமக்குத் தோன்றினாலும், உலகளாவிய காலநிலையில் இது பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கணிக்கப்படுகிறது.
இந்த மாற்றத்திற்கான காரணங்கள், வட துருவ பகுதிகளில் பனிப்பாறைகள் உருகுவதால் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் வெண்ணிற பரப்புகள் குறைந்து வெப்பத்தை உறிஞ்சும் கருமை நிற நிலப்பகுதிகள் மற்றும் கடற்பகுதிகள் அதிகரித்து வருவதே ஆகும். அதேநேரத்தில் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் காற்று மாசடைதல் குறைந்துள்ளதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. காற்றில் உள்ள தூசி போன்ற துகள்கள் குறைந்துள்ளதால், சூரியக் கதிரின் வெப்பம் முழுமையாக பூமியை வந்தடைகிறது. இதனால் புவி வெப்பமடைதல் என்பது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பூமியின் குளிர்ச்சித்திறன் செயலிழக்கத் தொடங்கியுள்ளது.
இவ்வாறு, அதிகரித்துள்ள வெப்பத்தை சமன் செய்ய அதிக அளவு மேகக்கூட்டங்கள் உருவாகும் என வல்லுநர்கள் கணித்தனர். ஆனால், எதிர்பார்த்தபடி போதிய அளவிலான மேகங்கள் உருவாகவில்லை. இந்நிலையில் வட மற்றும் தென் துருவங்களுக்கு இடையிலான வெப்பநிலை மாறுபாடு அதிகரித்து வருவதால், உலகம் முழுவதிலும் மழைப் பொழிவில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், புயல்கள் உருவாகும் பாதையிலும் மாற்றங்கள் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. இது, பூமியின் தற்காப்பு அரண்கள் பாதிப்புக்குள்ளாகி வருவதையே நமக்கு உணர்த்துகிறது. இது காலப்போக்கில் பூமியின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Follow Us