பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற நிலையில் ஹெச்.ராஜா மேடையிலேயே மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்த பின்னர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தொடர்ந்து அவர் சிகிச்சையில் உள்ள நிலையில் அவர் நலமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை பேசுகையில், ''ஆமாம் நேற்று நானும் அவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதுதான் அவருக்கு கொஞ்சம் மயக்கம் வந்தது. நான் அங்கு தான் இருந்தேன். பின்னர் மருத்துவமனையில் போய் சேர்த்தோம். நலமா இருக்கிறார். அவர் இன்னும் பூரண நலம் அடைந்து வர வேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். நல்லவேளை நாங்கள் இருந்ததனால் முதலுதவி செய்ய முடிந்தது. பூரண நலத்துடன் திரும்ப, ஆரோக்கியத்தோடு மக்கள் பணியாற்ற அவர் திரும்பி வர வேண்டும் என்று நான் இறைவனை மனதார பிரார்த்திக்கிறேன்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/31/797-2026-01-31-18-51-32.jpg)