Advertisment

'அன்புக்கு என்ன ஆச்சு' -தம்பி இறந்@து கூட தெரியாமல் எழுப்ப முயன்ற சகோதரி

a5617

'What happened to anbu' - Sister tries to wake up brother without even knowing he's lose their live Photograph: (vellore)

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்மார் பள்ளி ஊராட்சியில் புதியதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அப்பள்ளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

Advertisment

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குப்பன் என்பவரின் 4 வயதுடைய இரண்டாவது மகன் அன்பு. இவரது அக்கா ரேஷ்மா அங்குள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துவருகிறார். பள்ளி முடிந்து வரும் தனது அக்காவுக்காக காத்திருந்தபோது அங்கு தேங்கி இருந்த மழை நீரில்  விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டிடம் கட்ட தோண்டி இருந்த பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் சிறுவன் அன்புவை சடலமாக மீட்புக் கதறி அழுதுள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த மேல்பாடி காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

a5619
'What happened to anbu' - Sister tries to wake up brother without even knowing he's lose their live Photograph: (vellore)

குழந்தை அன்பு, தினமும் தனது அக்கா ரேஷ்மா பள்ளி முடிந்து வருவதை ஆவளோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பது வழக்கம் என கூறப்படுகிறது. இன்று ரேஷ்மா பள்ளி முடிந்து தனது வீட்டுக்கு வந்துபோது, தனது தம்பியை திண்ணை மீது பேச்சு மூச்சு இல்லாமல் படுக்கவைக்கப்பட்டிடுப்பதை பார்த்த சிறுமி ரேஷ்மா, அன்புக்கு என்ன ஆனது என்று கூட தெரியாமல் தொட்டுப்பார்த்து அவனிடம் பேச முயன்றார். தம்பியிடம் இருந்து பதிலுக்கு எவ்வார்த்தையும் வராததால் அதைப் பார்த்து அச்சிறுமி பயத்தில் அழ அங்கிருந்த மக்கள் கலங்கினர். பின்பு அச்சிறுமிக்கு ஆறுதல் கூறி தேற்றினர். 

sad incident school student heavy rain Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe