Advertisment

வெஸ்ட்பேலியா முதல்வரை வாழ்த்திய தமிழக முதல்வர்!

ger-cm-mks-meet

தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனியில் சுற்றுப்பயணம் செய்து வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், வெஸ்ட்பேலியா முதல்வர் ஹென்றியை சந்தித்து பேசினார். 

Advertisment

இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், "இன்று துசுல்டாஃபில் நார்த் ரைன் வெஸ்ட்பேலியாவின் (NRW) முதலமைச்சர் ஹென்றிக் வெஸ்ட்டை சந்தித்தேன். மிக இளம் வயதில் இத்தகைய தலைமை பொறுப்புக்கு வந்திருக்கும் அவர் வரும்காலங்களில் இன்னும் அதிக உயரம் தொட மனதார வாழ்த்தினேன். இந்தியாவின் முதன்மை தொழில் மையமான தமிழ்நாடும் ஜெர்மனியின் முக்கிய பொருளாதார மையமான நார்த் ரைன் வெஸ்ட்பேலியாவும் நன்னம்பிக்கையின் அடிப்படையில் முன்னேற்றத்திற்காக ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளோம். 

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை விரிவாக எடுத்துரைத்து, NRW இல் உள்ள பெரிய நிறுவனங்கள் நம் மாநிலத்தில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் என்கிற எனது கோரிக்கையை தெரிவித்தேன். மேலும் அவரை தமிழ்நாட்டுக்கு வருக என அன்புடன் அழைப்பு விடுத்தேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

chief minister mk stalin germany
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe