வங்கதேசத்தில் தொடர்ச்சியாக இந்தியா மீதான வெறுப்பு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சமீபத்தில் ஒரு இந்திய இளைஞரும் வங்கதேசத்தில் அடித்துக் கொல்லப்பட்டார். மேலும் வங்கதேசத்தில் வன்முறைகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அதே நேரத்தில் இந்தியா மீதான வன்ம பிரச்சாரங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், மேற்குவங்கத்தில் உள்ள உணவக சங்கம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரி முழுவதும் உள்ள ஹோட்டல்களில், வங்கதேசத்தில் இருந்து வரும் நபர்களுக்கு தங்குவதற்கு அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் காரணமாக புத்தாண்டு அன்று வங்கதேசத்தினருக்கு சிலிகுரி ஹோட்டல் சங்கம் தடை விதித்துள்ளது, மாணவர் விசா அல்லது மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வரும் வங்கதேசத்தினருக்கும் இந்தத் தடை பொருந்தும் என்று ஹோட்டல் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு கிரேட்டர் சிலிகுரி ஹோட்டல் நலச் சங்கத்தால் அறிவிக்கப்பட்டது.
இது குறித்து பேசிய சங்கத்தின் இணைச் செயலாளர் உஜ்வல் கோஷ், ‘தொடர்ந்து வங்கதேசத்தில் பரப்பப்படும் இந்தியாவிற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரமே இந்த முடிவுக்கு காரணம், முதலில் நாட்டின் அடையாளம், பிறகுதான் தொழில். நாட்டின் அடையாளத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு தொழிலுக்கு முன்னுரிமை அளிக்க முடியாது. மாணவர் விசா அல்லது மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வரும் வங்கதேசத்தினருக்கும் இந்தத் தடை பொருந்தும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதை திரும்ப பெற்றுள்ளோம்; என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/31/ban-2025-12-31-14-24-14.jpg)