Advertisment

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் அவமதிப்பு?; உள்துறை அமைச்சகம் பரபரப்பு உத்தரவு!

mamatadro

West Bengal government ordered to respond Insult to the President

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்க் அருகே 9வது சர்வதேச சாந்தலி மாநாடு நேற்று  (07.03.2026) நடைபெற்றது. முதலில் சிலிகுரி அருகே உள்ள பிதான்நகர் மைதானத்தில் நடைபெறவிருந்த இந்த மாநாடு, கடைசி நேரத்தில் மாநில நிர்வாகத்தால் சிறிய இடமான கோசைன்பூருக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு பேசிய போது, நாட்டின் முதல் குடிமகனான தன்னை வரவேற்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியோ, மாநில அமைச்சர்களோ வரவில்லை என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டால் குடியரசுத் தலைவர் அவமதிக்கப்பட்டார் என்று விவாதம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், குடியரசுத் தலைவரின் திரெளபதி முர்முவை வரவேற்பதற்கான பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறைகளில் உள்ள குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதா? பிதான்நகர் மைதானத்தில் நடைபெறவிருந்த மாநாடு ஏன் கோசைன்பூருக்கு மாற்றப்பட்டது? பிற தொடர்புடைய ஏற்பாடுகள் குறித்து மேற்கு வங்க தலைமைச் செயலாளரிடம் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் விரிவான அறிக்கை கேட்டதாகக் கூறப்படுகிறது. 

Mamata Banerjee Droupadi Murmu west bengal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe