Advertisment

“நான் மக்களின் வாக்குரிமைக்கான போராட்டத்தில் இருக்கிறேன்” - குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மம்தா பதிலடி!

murmu-mamta-mic

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிலிண்டர் விலை உயர்வு, மண்ணெண்ணெய் பற்றாக்குறை மற்றும் எஸ்.ஐ.ஆர். செயல்பாட்டில் பெண்களின் பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு எதிராகப் போராட்டம் நடத்த இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். இது சம்பந்தமாக, தற்போது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாகத் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். இந்த சமயத்தில், மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற "பழங்குடியின மாநாட்டிற்காக ஜனாதிபதி வருகையின் போது மேற்கு வங்க நிர்வாகம் சரியாக நடந்துகொள்ளவில்லை" என ஜனாதிபதி முர்மு குற்றம் சாட்டியிருந்தார்.  

Advertisment

இதற்கு மறுப்பு தெரிவித்த மம்தா, "மேற்குவங்க எஸ்.ஐ.ஆர். பணியின் போது, வாக்காளர்கள் பலருடைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதில், அவர்களின் வாக்குரிமை பறிபோயுள்ளது. மக்களின் வாக்குரிமைகளுக்காக நான் தொடர்ந்து போராட்டத்தில் இருந்து வருகிறேன். இதனைப் பாதியில் விட்டுவிட்டு என்னால் எப்படி அங்கு வரமுடியும்? அந்த நிகழ்ச்சியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடத்தவில்லை. ஜனாதிபதி நிகழ்ச்சி நடந்த அந்த பகுதிக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. அது இந்திய விமான கழகத்திற்குச் சொந்தமானது. இந்திய விமான கழகம் உங்களுக்குச் சொந்தமானது தானே. 

Advertisment

நிகழ்ச்சியின், பசுமை அறையை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்பாடு செய்திருந்தனர். நாங்கள் அதனைத் தேர்ந்தெடுக்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி கலந்துகொள்ள இருக்கும் சூழலில், தனியார் அமைப்பிற்கு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் அளவிற்கான திறன் இருக்காது என ஏற்கனவே நாங்கள் தெரிவித்திருந்தோம். ஆனால், ஜனாதிபதி அவராகவே சொந்த விருப்பத்துடன் சென்றுள்ளார். அது அவருடைய தனியுரிமையாகும். இதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்? நான் தற்போது தர்ணா போராட்டத்தில் இருக்கிறேன். இதனைப் பாதியில் விட்டு வர இயலாது. நிர்வாகம் சார்பாக எங்கள் மேயர் அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். இந்நிலையில், நீங்கள் எங்கள் நிர்வாகத்தைக் குறை சொல்ல முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

Droupadi Murmu President Mamata Banerjee west bengal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe