கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜி.அரியூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மகப்பேறு அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அந்த பெண்ணின் குடும்பத்தாரிடம் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் ரத்தக்கரை படிந்த அவர்களது ஆடைகளை துவைப்பதற்கு துணி பவுடர் சோப்பு உள்ளிட்டவைகளை வாங்கி வரச் சொல்லி உள்ளார். மேலும் 1500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கேட்டுள்ளார். எதற்காக பணத்தை கேட்கிறீர்கள் என்ற கேட்கும் போது குழந்தை பெற்ற ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டும், இது எங்க ரூல்ஸ் என்றும், இரத்தம் நிறைந்த அந்த துணிகளை என் கையாலே துவைக்க வேண்டும் என்று கூறுகிறார்.
அதற்கு வீடியோ எடுத்த நபர் வாஷிங் மெஷின் இல்லையா என்று கேட்டபோது அதெல்லாம் இங்க இல்ல. இங்க வேலை செய்வதற்கு வெளியில் சித்தாள் வேலைக்கு போனா கூட காலையில 6 மணிக்கு போனா சாயங்காலம் 6 மணிக்கு வந்துவிடலாம் என்றும், '1500 ரூபாய் கொடுத்து ஆக வேண்டுமா?' என்று கேட்கும் போதும் 'கொடுத்தே ஆக வேண்டுமா என்று கேட்டால் என்ன சொல்வது கொடுங்கள்' என்று சொல்லிவிட்டு சொல்கிறார்.
அதன் பிறகு அந்த குடும்பத்தினர் 1000 ரூபாய் எடுத்துச் சென்று அந்த மருத்துவமனை ஊழியரிடம் கொடுக்கிறார். மேலும் தான் பொதுச் சேவை செய்யக்கூடியவன், என்னிடமே பணம் கேட்கிறீர்கள் போனால் போகட்டும் என்று தான் கொடுக்கிறேன் என கூறும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் அரசின் சார்பில் துணிகளைத் துவைப்பதற்கு முன்பெல்லாம் டோபி என பணியாளர்கள் வைத்திருந்தனர். ஆனால் தற்போது தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய வாஷிங்மெஷின்களை அரசே மருத்துவமனைகளுக்கு வழங்குகிறது. இருந்த போதிலும் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் வாஷிங் மெஷின் இல்லாததால் இன்று வரை கையாலேயே துணிகளை துவைக்கும் நிலை இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து திருக்கோவிலூர் முதன்மை மருத்துவ அலுவலர், பொதுமக்களிடம் சோப்பு, துணி பவுடர் வாங்கச் சொல்லி கூறுவதில்லை அதை மருத்துவமனை நிர்வாகமே அளிக்கிறது. பணம் பெற்ற நபர் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.