பொங்கலை ஒட்டி கடலூர் காராமணிக்குப்பம் பகுதியில் சுமார் 150 ஆண்டுகள் பாரம்பரியமிக்க கருவாட்டு சந்தை களைக்கட்டியுள்ளது.  கடலூர் மாவட்டம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மாட்டுப்பொங்கல் தினத்திற்கு பிறகு கருவாடு சமைத்து படையல் இடுவது வழக்கம். இந்த சந்தைக்கு தற்பொழுது பொங்கலை முன்னிட்டு அதிகப்படியான மக்கள் அதிகாலை முதலே கருவாடு வாங்கி வருகின்றனர்.

Advertisment

தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சாரல் மழை மற்றும் பனி தொடர்ந்து வரும் நிலையில் அதையும் பொருட்படுத்தாமல் கூட்டமானது களைகட்டி வருகிறது. மீன்வரத்து குறைந்து இருப்பதால் கருவாட்டு வரத்தும் குறைந்து இருக்கிறது. இதனால் கருவாடு விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை இந்த கருவாட்டு சந்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisment