Advertisment

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து உலகநாடுகளுக்குச் சொல்வோம்; ஐரேசியா ஆப்ரோ வர்த்தக அமைப்பு அறிவிப்பு!

S2

தமிழ்நாடு அரசின் இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் திட்டங்களை ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எடுத்து செல்ல உள்ளதாக ஐரேசியா ஆப்ரோ வர்த்தக அறை அமைப்பினர் தெரிவித்தனர்.

Advertisment

ஐரேசியா ஆப்ரோ வர்த்தக அறை, தென்னிந்தியாவை உலகளாவிய நுகர்வோர் மையமாக மாற்றும் நோக்குடன் கல்விச் சுற்றுலா & மருத்துவ சுற்றுலா குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.தென்னிந்தியாவை ஒரு முக்கியமான மருத்துவ சுற்றுலா. சுற்றுலா அடிப்படையிலான கல்வி. அழுத்தமான கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் வர்த்தக கூட்டாண்மை ஆகியவற்றுக்கான மாவட்ட மையமாக உருவாக்கும் நோக்குடன் முன்னேறுகிறது.இந்த நிகழ்வில், ஐரேசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களில் இருந்து பல்வேறு உலகளாவிய வணிகத் தலைவர்கள், தூதுவர்கள், மற்றும் தொழில்துறையினர் பங்கேற்றனர்.

Advertisment

S1

தென்னிந்தியாவை உலக மருத்துவ சுற்றுலா மையமாக மாற்றுதல். இந்தியாவின் மேம்பட்ட மருத்துவ வசதிகளை கொண்டு, ஆப்பிரிக்கா மற்றும் பிற பகுதிகளில் இருந்து நோயாளிகளை ஈர்க்கும் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இந்திய மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆப்பிரிக்க நாட்டு ஆராய்ச்சி மையங்கள் இடையே நேரடி ஒத்துழைப்பு உருவாக்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் தொழில் வளர்ச்சி வலயங்கள் தொழில்துறை பூங்காக்கள் உருவாக்கம் குறித்து விவாதிக்கப்படுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் (EACC) தலைவர் ரோஹித் குப்தா பேசுகையில், ஆப்பிரிக்கா மற்றும் ஐரேசியாவில் இருந்து தென்னிந்தியாவின் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவ சுற்றுலா மற்றும் கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்து, இதன் மூலம் தென்னிந்தியாவை உலக சுற்றுலா தரத்துக்கு முன்னேற்றுவது குறித்தும், தமிழ்நாட்டின் மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட தமிழக அரசின் சிறந்த திட்டங்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று அங்கு அதை நடைமுறைப்படுத்துவது குறித்தும் நமது பெருமை பாரம்பரியம் மற்றும் நமது செயல் திட்டங்கள் குறித்தும் தெரிவிக்க உள்ளோம். இந்த மருத்துவ சுற்றுலா மற்றும் கல்வி சுற்றுலா மூலம் தமிழகத்தின் சிறந்த திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பாதை குறித்து வெளிநாட்டினர் அறிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தனர்.

Business Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe