செப்டம்பர் 15 இன்று திமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்த தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைத்தள பதிவில்,'தமிழன்னை தந்திட்ட தலைமகன்! திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்' என தெரிவித்துள்ளார்.