தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள  நிலையில்  அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பெரம்பலூரில் திமுக பொதுக்கூட்டத்தில் 'எங்களுக்கும் கடவுள் நம்பிக்கை வந்துவிட்டது' என திமுகவின் ஆ.ராசா பேசியுள்ளார்.

Advertisment

அவரது உரையில், ''பெரியார் பற்றவைத்த நெருப்பு இன்றைக்கும் இந்தியாவுக்கு தேவைப்படுகிறது என்பதை தான் அகிலேஷ் யாதவாக இருந்தாலும், மம்தா பேனர்ஜியாக இருந்தாலும், கூட்டணி கட்சிகள் யாராக இருந்தாலும் எங்களிடத்தில் கேட்கிறார்கள். பாஜக இவ்வளவு தந்திரங்களை செய்து, இவ்வளவு பொய் வாக்குறுதிகளை கொடுத்து, மதவெறியைத் தூண்டி என்னென்னவோ செய்து, அமலாக்கத்துறை, இன்கம் டேக்ஸ், சிபிஐ அத்தனையும் வைத்து மிரட்டுகிறார்கள். இருப்பினும் அவர்கள் தந்திரம் தமிழ்நாட்டில் பலிக்கவில்லையே எப்படி எனக் கேட்கிறார்கள்.

Advertisment

அதற்கு காரணம் எல்லைச்சாமிகள் இருக்கிறார்கள். 92 வயதில் (கி.வீரமணியை குறிப்பிட்டு) ஒரு எல்லைச்சாமி இருக்கிறார். எங்களுக்கும் சாமி நம்பிக்கை வந்து விட்டது. கோட்டையில் ஒரு எல்லைச்சாமி (மு.க.ஸ்டாலின்) இருக்கிறார். இந்த இரண்டு எல்லைச்சாமிகள் தமிழ்நாட்டில் இருக்கும் வரைக்கும் பெரியார், அண்ணா, கலைஞர் எல்லோரும் உயிரோடு இருப்பதாக அர்த்தம். அதுவரைக்கும் யாரும் உள்ளே வர முடியாது. தத்துவத்திற்கு ஒரு தலைவர் 92 வயதில் இருக்கிறார். தத்துவத்தைக் கொண்டு ஆட்சி நடத்துகின்ற இன்னொரு தலைவர் 72 வயதில் இருக்கிறார். இன்னும் 2000 ஆண்டுகளுக்கு இந்த மண்ணில் இருந்து ஓட்டக்கூடிய வலிமை மிகுந்த அரசைத் தருவார்கள். இந்த ஆட்சி தொடர வேண்டும்'' என்றார்.