ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்தை வரவேற்று வேலூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்: போஸ்டர் ஒட்டியவர் அதிமுகவில் இல்லை என அதிமுக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும், இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள 10 நாள் கெடு விதிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இந்நிலையில், "ஒன்றிணைய வேண்டும்" என்ற செங்கோட்டையனின் கருத்தை அதிமுகவின் உண்மை விசுவாசிகள் வரவேற்பதாகக் கூறி, வேலூரில் முக்கிய இடங்களில் பெரிய அளவிலான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது குறித்து அதிமுக தரப்பில் (மாவட்டச் செயலாளரிடம்) விசாரித்தபோது, போஸ்டர் ஒட்டிய நபர் தற்போது அதிமுகவில் இல்லை என்றும், அவருக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தனர்.