தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வேலூர் மாவட்டம் அகரஞ்சேரியில் 23.02..2026 அன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது உரையில், “எனக்கு புது நண்பர் ஒருத்தர் கிடைத்திருக்கிறார். யார் தெரியுமா?. முதல்வர் தான்.  ஒரு நிருபர் ஒருத்தர் கேட்ட கேள்விக்கு எனக்கு எதிரிகள் எல்லாம் யாரும் இல்லை அவர்கள் எல்லாருமே எனக்கு நண்பர்கள் தான் என்று சொன்னார். அப்படி நாங்கள் எல்லாம் உங்களுக்கு நண்பர்கள் தான் என்றால் அப்புறம் ஏன் சார் கரூர் விஷயத்தில் என் மேல் பழியைத் தூக்கிப் போட்டீர்கள். உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அப்படி பேச்சிருப்பீர்களா?'எனப் பேசியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் விஜய்யின் பேச்சு குறித்து திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''கட்டாயமாக விஜய்யை சிக்க விடவில்லை. கரூரில் விஜய் கூட்டத்திற்கு வந்த மக்கள் இவர் 12 மணிக்கு பேசுவார் என்ற நம்பிக்கையிலே 9 மணிக்கே அங்கே கூடினர் மக்கள். சரியான உச்சி வெயிலில் குடிக்கத் தண்ணீர் இன்றி, உணவின்றி ஏழரை மணி வரைக்கும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த கூட்ட நெரிசலில் 41 பேர் மயங்கி விழுந்து இறந்தார்கள். என்பது இயல்பான ஒன்று. 12 மணிக்கு வருவதாக சொல்லிவிட்டு ஏன் ஏழரை மணிக்கு வந்தார் என்பதற்கான காரணத்தை இதுவரை அவர் சொல்லவில்லை. ஏன் சொல்லவில்லை?

அந்த மக்கள் 12 மணிக்கு அங்கே காத்திருப்பார்கள். ஒரு மணிக்கு வந்தால் கூட பரவாயில்லை. மக்கள் கூட்டம் தனக்காக காத்திருக்கிறது என்று தெரிந்தும் அந்த இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கோ சற்று முன்னர் பின்னரோ வந்து பேசிவிட்டு சென்றிருந்தால் அவ்வளவு மக்களும் தப்பித்திருப்பார்கள். அதை அவர் செய்யவில்லை. அதற்கான காரணத்தை இதுவரை சொல்லவில்லை'' என்றார்.

Advertisment