'We have lost hope' - Kallathikulam people go all the way to the President Photograph: (thenkasi)
கல்லத்திகுளம் கிராமத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டி மக்களின் குடியிருப்பு பகுதிக்கு அருகில் அமைக்கப்படும் தனியார் நிறுவனத்தின் சோலார் மின் திட்டத்திற்காக, அப்பகுதியில் செழித்து வளர்ந்திருந்த பனை மரங்கள், பயன் தருகிற லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியும், அந்த விளைச்சல் பூமியையும் அழித்ததால் தங்களின் வாழ்வாதாரம் பறிபோய் விட்டது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பலமுறை அரசு, மற்றும் ஆட்சியருக்கு மக்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தென்காசி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகளில் சிலர் தீக்குளிக்கவும் முயன்றிருக்கிறார்கள்.
தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக, இயற்கை வளமான விவசாய பூமியை அழிச்சு குடியிருப்பு அருகே சோலார் மின் அமைப்பதால் எங்க வாழ்வாதாரம் போச்சு, எங்கள் கோரிக்கையை வெளிப்படுத்தியும் பயனில்லை. அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திடமும் நம்பிக்கையை இழந்துவிட்டோம். எங்களது வாழ்வரதாரம் போனதால நாங்க ஊரைவிட்டுக் காலிபண்ணிப் போற நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கோம். அதனால எங்க கிராமத்தின் முந்நூறு குடும்பங்களின் குடிமை ஆதாரமான ஆதார், வாக்காளர் அட்டைகள் மற்றும் ரேசன் கார்டுகளை உங்க கிட்ட ஒப்படைக்கிறோம்.
தமிழக கவர்னருக்கு ஒரிஜினல் ஆதார், ரேசன் கார்டுகளையும், இந்திய ஜனாதிபதிக்கு அதன் நகல்களையும் அஞ்சல் வழி மூலம் அனுப்பியதோடு இணைக்கப்பட்ட மனுவில் எங்கள் வாழ்வாதாரமே அழிக்கப்படும் போது எங்களுக்கு இந்த அடையாள அட்டை எதற்கு. சோலார் மின் திட்டத்தை நிறுத்த வேண்டும். திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கோரியதோடு அவைகளை கல்லத்திகுளத்தில் குடியிருக்கும் நம்பிராஜன், மாரியப்பன், பெருமாள் உள்ளிட்ட பொதுமக்கள் நெல்லை ஸ்ரீபுரத்திலுள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்திலிருந்து பார்சல் மூலம் அனுப்பியுள்ளனர்.
பாதிப்பிற்குள்ளான விவசாயிகளின் ஆதங்கமும் அவர்களின் இந்த தீர்க்கமான செயல்பாடுகளும் மாவட்டத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளன.
Follow Us