தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Advertisment
அதேபோல் அதிமுக - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பாமக, தமாக, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
Advertisment
இந்தநிலையில், திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த தவெக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர், "தவெகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. விஜய் வெற்றி பெற வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். விஜய்யை யாருடனும் கூட்டணி சேராமல் தனியாக நிற்க வேண்டும் என்றும், அப்படி யாருடனும் சேர்ந்தால் உங்கள் தனித்தன்மையை இழக்க நேரிடும் என்று மக்கள் சொல்கிறார்கள். இருப்பினும் சில காட்சிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறது. காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தவெக வுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசி வந்தார். காங்கிரஸ் ஒரு பாரம்பரியமான கட்சி, அதற்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. அந்தக் கட்சி நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்த கட்சி. ஆனால் தற்போது அந்த கட்சி தேய்ந்து போய்விட்டது. மற்ற கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து ஆதரவு கொடுத்து தற்போது அந்த கட்சி மோசமான நிலைக்கு வந்துவிட்டது. அதற்கு காரணம்,  அந்த கட்சிக்கு ஆட்சி அதிகாரம் இல்லாதது தான். அதற்கு விஜய் பவரை கொடுக்கிறேன் என்கிறார். பவருக்கு வந்தால் காங்கிரஸ் மீண்டும் வரலாற்றை தக்கவைத்துக்கொள்ளும்.
ஆனால், விஜய் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக கூறுகிறார். எனவே இந்த வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக்  கொள்ள வேண்டும். அதிகாரத்தை பெறுவதன் மூலம் அந்த கட்சி வளர்ச்சியடைந்தால், காங்கிரஸ் மீண்டும் தனது பழைய வரலாற்றை திரும்ப கொண்டுவர முடியும்" என்று தெரிவித்திருந்தார்.
Advertisment
எஸ்ஏசியின் கருத்துக்கு உடனடியாக காங்கிரஸ் ரியாக்ட் செய்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை இடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, ''நாங்கள் ஏற்கனவே பூஸ்ட்டில் தான் இருக்கிறோம். பாருங்கள் எங்கள் கேடர்களை எல்லாம். ஏற்கனவே ராகுல் காந்தி எங்கள் எல்லோருக்கும் பூஸ்ட் கொடுத்து வைத்துள்ளார். ஹார்லிக்ஸ் கொடுத்து வைத்துள்ளார். எங்களுக்கு யாரும் பூஸ்ட் கொடுக்க வேண்டாம். நாங்கள் போன்விட்டா, ஹார்லிக்ஸ் எல்லாமே சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். இருந்தாலும் பூஸ்ட் கொடுப்பேன் என சொன்னதற்கு நன்றி'' என்றார்.