Advertisment

'அவமானப்படுத்தும் வகையில் பேசியதைதான் கண்டிக்கிறோம்' -டி.டி.வி.தினகரன் பேட்டி

914

ttv Photograph: (ammk)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு அவருடைய தனிப்பட்ட விருப்பம். ஓபிஎஸ்க்கு உரிமை இருக்கிறது. எந்த கூட்டணியில் வேண்டுமானாலும் அவர் போட்டியிடலாம். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் எம்.ஜி.ஆரின் புகழுக்கும், ஜெயலலிதாவின் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் சட்டமன்றத்தில் அவர்கள் பேசியது எம்ஜிஆர் ஆசியோடு, ஜெயலலிதா ஆசியோடு திமுகவின் ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று சொன்னதை ஜெயலலிதாவின் தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எம்ஜிஆரின் தொண்டர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

Advertisment

எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கியதே திமுகவிற்கு எதிராக தான். எம்.ஜி.ஆர் ஒரு 15 ஆண்டுகளும், ஜெயலலிதா 30 ஆண்டுகளும் எனக் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை கடந்து திமுக எதிர்ப்பில் இருக்கின்ற தலைவர்களின் தொண்டர்களை அவமானப்படுத்துகின்ற வகையில் பேசியதைதான் நாங்கள் கண்டிக்கிறோம். பன்னீர்செல்வம் எந்த கூட்டணிக்குச் செல்வது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம்'' என்றார்.

jayalaitha M.G.R. ops ammk ttv dinakaran ammk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe