'We are waiting for DMK's response' - Interview with Congress's Krish Jodankar Photograph: (congress)
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பா.ம.க, த.மா.க, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் திமுக இதுவரை தங்களை கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடாங்கர் தெரிவித்துள்ளார்.
திமுகவின் பதிலுக்காக இரண்டு மாதங்களாக காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ள அவர், ''கூட்டணி பேச்சுவார்த்தை இதுவரை தொடங்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கிறது. டிசம்பர் 3 ஆம் தேதி முதல்வரை சந்தித்தோம். அதன் பிறகு டிசம்பர் 15ஆம் தேதிக்குள் கூட்டணியை இறுதிச் செய்ய கோரி இருந்தோம். எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை. ஆனால் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் தொடங்கவில்லை. திமுக தரப்பிலிருந்து ஏன் இவ்வளவு தாமதம் எனத் தெரியவில்லை. திமுகவின் பதிலுக்காக இரண்டு மாதங்களாக காத்திருக்கிறோம் என ஏஎன்ஐ செய்தி நிறுவத்திற்கு அளித்த பேட்டியில் கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்துள்ளார்.
Follow Us