கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. மேலும், தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.
Advertisment
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் நடிகர் விஜய் வீடியோ காலில் பேசியதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் வரும் வரும் 17 ஆம் தேதி  விஜய் கரூர் செல்ல இருப்பதாகவும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Advertisment
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதாவ் அர்ஜுனா, ''உச்சநீதிமன்ற தீர்ப்பை சாமானிய மனிதனாக பார்த்து வருகிறேன். உண்மை நிச்சயம் வெளியே வரும். கரூர் துயரத்தில் உறவுகளை இழந்த வேதனையில் மிகுந்த வலியோடு இறந்தோருக்கு 16வது நாள் துக்கம் அனுசரித்து வருகிறோம். குடும்ப உறுப்பினர் வீட்டில் துயரம் ஏற்பட்டதாக கருதி பதினாறாம் நாளாக விஜய் அமைதியாக இருக்கிறார். எங்கள் மீதான அவதூறுகள் மற்றும் தவறான செய்திகள் குறித்து தற்போது பேசத் தயாராக இல்லை. எங்கள் மீதான அவதூறுகளைப் போக்கி கரூரில் நடந்தது குறித்த உண்மைகளை வெளியே கொண்டு வரப் போராடுவோம்'' என தெரிவித்துள்ளார்.