தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இன்று ராமநாதபுரம் கமுதியில் நடைபெற்று வரும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவம் கொண்ட கொடியை அறிமுகப்படுத்திய சசிகலா புதிய கட்சியைத் தொடங்க இருப்பதாகவும், புதிய கட்சி பெயரை விரைவில் அறிவிப்பேன் என சசிகலா அறிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் 'திடீர் இட்லி திடீர் சாம்பார் போல வரும் புதிய கட்சிகளால் எங்களுக்கு பாதிப்பு இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நெல்லை நாங்குநேரியில் செய்தியாளர்களை சந்தித்து அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''99.5% தொண்டர்கள் அதிமுகவில் ஓரணியாக இணைந்து விட்டோம். சுதந்திர இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். யாரோ ஏதோ தொடங்கலாம் திடீர் சாம்பார் திடீர் இட்லி போல புது புது கட்சிகள் வரலாம். ஜெயலலிதாவின் ஆட்சி அமைப்போம் ஜெயலலிதாவின் கட்சியை ஒன்றிணைப்போம் என்று சொல்பவர்கள். அவர்களுடைய சாயும் வெளுக்கும் நேரம் வந்து இருக்கிறது. சீப்பை ஒழித்து விட்டால் இது போன்ற ஜெயலலிதாவின் ஆட்சி வருகையை யாராலும் தடுக்க முடியாது. சசிகலாவுக்கு 0.1% வாக்குகள் கூட கிடையாது. காகம், குருவிகள் நெல்மணிகளை கொஞ்சம் கொத்தி செல்வதால் எங்கள் கூட்டணிக்கு சேதம் இல்லை. சிதறியது நெல் மணிகள் அல்ல பதர்கள். அதனால் எங்களுக்கு பாதிப்பு இல்லை'' என்றார்.