Advertisment

'அந்த தொகுதிகளை தான் நாங்கள் கேட்கிறோம்...'-மீண்டும் கொளுத்திப் போட்ட மாணிக்கம் தாகூர்

5952

'We are asking for those constituencies...' - Manickam Tagore fires back Photograph: (politics)

சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்தார்.

Advertisment

ஆட்சியில் பங்கு கிடையாது என காங்கிரஸுக்கு மீண்டும் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மதுரை முனிச்சாலையில் திமுக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசுகையில், “காங்கிரஸுக்கு குடைச்சல் மாட்டோமா என்கிற எண்ணத்தில் பா.ஜ.ககாரன் இருக்கிறான். ஆனால் நாங்கள் காங்கிரஸிடம் நிலைமையை சொல்கிறோம். நாம் ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைத்தால் தான் நல்லது என்று சொல்கிறோம். அவ்வளவு தான் சொல்கிறோமே தவிர கூட்டணி வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்கு எங்களுக்கு உரிமை கிடையாது. ஆட்சியில் பங்கு கிடையாது என்று முதல்வர் தெளிவாக சொல்லிவிட்டார். 93 இடம் தான் கலைஞர் வைத்திருந்தார், ஆனால் அப்போது ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை. அப்புறம் எப்படி இப்போது கொடுக்க முடியும். 150இல் இருந்து 160 தொகுதியில் உதயசூரியன் ஜெயிக்கும் நீங்கள் பாருங்கள். 170 தொகுதியில் நிப்போம், 150 தொகுதியிலிருந்து 160 தொகுதி வரை ஜெயிப்போம். உதயசூரியன் ஜெயிக்கும்” என்று கூறியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசிய காணொளியை டேக் செய்து அதற்கு பதிலளிக்கும் வகையில் எக்ஸ் வலைத்தளத்தில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், '2021 யில் 173 யில் போட்டியிட்டு 133 வெற்றி .. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார். இதனால் 40 தொகுதிகளை திமுக கூட்டணியில் காங்கிரஸ் பெற முயற்சிப்பதாக பேச்சுக்கள் எழுந்துள்ளது.

rajakannappan congress Manickam Tagore dmk alliance parties dmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe